என்னிடம் பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சியளிக்கிறது; திருப்பூரில் வேலை செய்யும் கார்கில் பெண்

பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை தரும் பனியன் தொழில் நகரமான திருப்பூரில் வேலைவாய்ப்பு பெற்ற  கார்கில் பெண் பர்வீன் பாத்திமா, மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தன்னைப்பற்றி கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். திருப்பூரில் வேலை வாய்ப்பு பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்ட கார்கில் பெண்களை பற்றிய சிறப்பு தொகுப்பு :பல்வேறு மாநிலம், நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை அள்ளித்தரும் பனியன்  நகரம் திருப்பூர். தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பு தரும் நகரம் இது. இங்கு தொழில் தேடி வருபவர்கள் விரைவில் தொழிலை கற்று , நல்ல வருமானத்தினை சம்பாதித்து தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கின்றனர். இவ்வாறாக திருப்பூரில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதி மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மத்திய  அரசின் ஹிமாயத் திட்டத்தில் பயிற்சி பெற்ற பெண்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சிறப்பாக பணி புரிவதாகவும், தொழில் முனைவோராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர், ' திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கார்கிலை சேர்ந்த பர்வீன் பாத்திமா என்ற பெண் சூப்பர்வைசராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சுயசார்புடன் வாழ்க்கை தரத்தை முன்னேற்றி கொண்டு உள்ளார் எனவும் மோடி கூறினார்.திருப்பூரில் உள்ள பர்வீன் பாத்திமா பணி புரியும் நிறுவனமான  எஸ்.சி.எம்., பனியன் நிறுவனத்தில் கார்கில் பகுதியை சேர்ந்த  90 பெண்கள் பணிபுரிகின்றனர். வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பனியன் துணிகளை தைக்கும் பணிகளில் அனுபவஸ்தர்களாக மாறிவிட்டனர். இங்கு தங்கியிருந்து பணியாற்றும் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதாகவும், வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய பர்வீன் பாத்திமா 'இத்திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று தற் பொழுது திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பதவி பெற்று தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளார் என்று தெரிவித்தார் மேலும் இது குறித்து பர்வீன் பாத்திமா விற்கு நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்த பிரதமர் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய பர்வீன் பாத்திமா பிரதமர் தன்னிடம் தொலைபேசியில் பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவும் தனது பணி குறித்து கேட்டறிந்த தாகவும் தெரிவித்தார்.  மேலும் தங்கள் ஊரில் இது போன்ற பணிகள் மற்றும் தொழிற்சாலைகள் மேம்பாட்டு வசதிகள் இல்லாததாலேயே தமிழ்நாட்டிற்கு வந்து வேலை பார்ப்பதாகவும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் இனிமையாக பழகுவதாகவும் வேலைகளுக்கான பயிற்சியும் சிறப்பாக கொடுத்ததாகவும் தெரிவித்தார் தனதுபெற்றோர் இவ்வளவு தூரம் சென்று பெண் வேலை பார்க்கிறார் என கவலை அடைந்ததாகவும் ஆனால் தான் இங்கு பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.   இவ்வளவு பெரிய நிறுவனத்தில் பணி கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தனது பெற்றோர் மற்றும் உடன் பணிபுரியும் நண்பர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பர்வீன் பாத்திமா பேட்டியளித்துள்ளார்.


இதே போல அஸ்ரா பானு, என்ற பெண்ணும் தமிழகத்துக்கு வந்த பின்னர் தனக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.