வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்டங்களை விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் வழங்கினார்

வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்டங்களை விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் வழங்கினார்.  

 


 

முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் சார்பில்     கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு  வட்டாட்சியர் கமலா தலைமை தாங்கினார்,  துணை வட்டாட்சியர் சாந்தி வரவேற்றார், மண்டல வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். 

 


 

விருத்தாசலம் எம்எல்ஏ, கலைச்செல்வன் கலந்து கொண்டு  371 நபர்களுக்கு மனைபட்டாவும், 350 நபர்களுக்கு முதியோர் உதவி தொகையும், ஒருவருக்கு குடும்ப அட்டை என மொத்தம் 91 லட்சத்து, 50 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள நலத் திட்டங்களை வழங்கினார்.   

 


 

விழாவில்  தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வி பூங்குழலி,  வருவாய் ஆய்வாளர்கள் வேப்பூர், பழனி, சிறுபாக்கம் குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜவேல் அதிமுக ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கதுரை,  வேப்பூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஆறுமுகம், கிளை நிர்வாகிகள் செந்தில்குமார், மல்லன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ராஜாமணி, ரவிக்குமார், ராஜி, பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.