கரும்பு காட்டுக்குள் இருந்து சிறுத்தை குட்டிகள் வெளிவந்ததால் பொதுமக்கள் அச்சம்

கரும்பு காட்டுக்குள் இருந்து சிறுத்தை குட்டிகள் வெளிவந்ததால் பொதுமக்கள் அச்சம் தாளவாடி மலைப்பகுதியில் தொட்ட முருகரை கிராமத்தில் விவசாயி தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது.  இன்று காலை கரும்பு வெட்டும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கரும்பு காட்டுக்குள் இருந்து  இரண்டு சிறுத்தை குட்டிகள் வெளியே வந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். கரும்பு காட்டில் இருந்து வெளியே வந்த சிறுத்தை குட்டிகள் அங்குமிங்கும் நடந்தபடி உலாவுவது அப்பகுதி கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜீரக அல்லி வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டனா். இந்த சிறுத்தை குட்டிகள் பிறந்து 20 நாட்களே ஆகும் எனவும் இப்பகுதிக்கு வந்த சிறுத்தை குட்டி களை இங்கு ஈன்று விட்டு விட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சிறுத்தை குட்டிகள் இரண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் எனவும் தெரிவித்தனர்.