168 படத்தில் வெயிட்டான கதாபாத்தித்தில் சித்தார்த்


தர்பார் படத்தை அடுத்து ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பது அனைவருக்கும் தெரியும். ரஜினியின் தங்கையாக கீர்த்தி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 168 படத்தில் நடிக்க சித்தார்த்தை அணுகியுள்ளாராம் சிவா.
படத்தில் சித்தார்த்துக்கு வெயிட்டான கதாபாத்திரமாம். அவர் தான் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாம். சித்தார்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டாரா என்பது இன்னும் தெரியவில்லை. சித்தார்த் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்காக அவர் பல்காக டேட்ஸ் கொடுத்திருக்கிறார்.இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு விஷயத்தால் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியன் 2 படத்திற்கு மொத்தமாக டேட்ஸ் கொடுத்துள்ளதால் சித்தார்த் ரஜினி படத்திற்கு டேட்ஸ் கொடுக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதை அவர் தான் உறுதி செய்ய வேண்டும். சித்தார்த் ட்விட்டரில் படு ஆக்டிவாக உள்ளார். அதனால் கண்டிப்பாக தலைவர் 168 பற்றிய செய்தியை பார்த்துவிட்டு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.