மனஅழுத்தத்தில் இருந்து விடுபட சிக்ஸ் பேக் வைத்தேன்-விஷ்ணு விஷால்


நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை பிரிந்ததாலும், கெரியர் பாதிக்கப் பட்டதாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்தார்.  அதில் இருந்து மீண்டு வந்து சிக்ஸ் பேக் வைத்த விஷயத்தை அண்மையில் அவர் ஒரு கடிதம் மூலம் ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாகியுள்ளார்.27 வயது வரை மதுவை தொடாத நான் படங்களில் நடிக்கத் துவங்கிய பிறகு கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தேன். மன அழுத்தம் ஏற்பட்ட பிறகு மதுவுக்கு அடிமையானேன். ஒரு கட்டத்தில் நான் செய்வது எனக்கே பிடிக்காமல் போனது. அதன் பிறகே மதுப்பழக்கத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்தேன் என்கிறார் விஷ்ணு விஷால்.
என் வாழ்க்கையில் இதுவரை செய்யாத விஷயம் சிக்ஸ் பேக். அதை செய்ய விரும்பினேன். என் ட்ரெய்னரிடம் கூற அவரும் உதவி செய்தார் என்கிறார் விஷ்ணு விஷால். அவர் பற்றி ட்ரெய்னர் கூறியதாவது, விஷ்ணு இங்கு வந்த போது அவரால் தொடர்ந்து ஒர்க்அவுட் செய்ய முடியாது. ஸ்ட்ரெஸ் அதிகமாகிவிட்டால் அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் விஷ்ணு. அதை எல்லாம் தாண்டி மன உறுதியுடன் செய்லபட்டு சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என்றார்.விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த அவரின் தோழியான பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்ன என்று கமெண்ட் போட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். விஷ்ணு விஷால், ஜுவாலா தங்களின் காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். புத்தாண்டை அவர்கள் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.