ஓட்டப்பிடாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தகராறு – கல்லால் அடித்து ஒருவர் கொலை, 2 பேர் படுகாயம்

ஓட்டப்பிடாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தகராறு – கல்லால் அடித்து ஒருவர் கொலை, 2 பேர் படுகாயம்.

 


 

ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இருவர் படுகாயம் அடைந்தனர் .தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடை  பெற்றது, தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் ஒன்றான ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு லதா மாசான சாமி மற்றும் மற்றொரு வேட்பாளரான இளையராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

 


 

இந்நிலையில் இன்று மேட்டூர் வாக்குச் சாவடி அருகில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர் வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர் . இதில் லதாவின் கணவரான மாசான சாமி அவரது உறவினர் இயேசு என்ற சண்முகசுந்தரம் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

 


 

மேலும் வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள சாலையில் மாரியப்பன் என்பவர் கல்லால் அடித்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை ஓட்டப்பிடாரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது