சினிமா பாணியில் நடந்த காவலர்கள் சஸ்பெண்ட்.- S.P.சித்தார்த் கவுஷல் அதிரடி.




சினிமா பாணியில் நடந்த காவலர்கள் சஸ்பெண்ட்.- S.P.சித்தார்த் கவுஷல் அதிரடி.

 


 

செல்போன் தொலைந்ததாக கூறி சாதாரண இளைஞராக புகார் அளிக்க வந்த பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி ஜெகதீஷ். அலட்சியமாக நடத்திய ஆந்திரா, ஓங்கோல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ரைட்டர், மற்றும் காவலர்கள் உள்ளிட்ட  7 பேர் சஸ்பெண்ட். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து பிரகாசம் மாவட்ட S.P. சித்தார்த் கவுஷல் அதிரடியில் இறங்கினார் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள  எஸ் பி  சித்தார்த் கவுஷல், டிரெயினிங் ஐ பி எஸ் அதிகாரியான ஜெகதீஷ் என்பவரை தனது செல்போன் காணாமல் போனதாக புகாரளிக்க கூறி காவல் நிலையம் அனுப்பி வைத்தார்

 


 

இதனை அறியாத ஓங்கோல் தாலுகா காவல் நிலைய போலீசார் அவரை வெகுவாக அலைக்கழித்ததுடன், மிகவும் மரியாதைக்குறைவாகவும் நடத்தியுள்ளனர், இது குறித்து டிரெயினிங் ஐ பி எஸ் அதிகாரியான ஜெகதீஷ் பிரகாஷம் மாவட்ட S.P. சித்தார்த் கவுஷலிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ,ரைட்டர் உள்ளிட்ட ஏழு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து S.P. சித்தார்த் கவுஷல் உத்தரவிட்டார் இச்சம்பவம் ஆந்திர போலீசாரிடையே அதிர்ச்சியையும் , பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது


 

 



 

Previous Post Next Post