தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழு  2018-2020 ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழு - 2018-2020 ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர்  அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்  சி.அ.ராமன் வரவேற்புரை ஆற்றினார்.



இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழுத் தலைவர் / மாண்புமிகு எதிர்கட்சி துணைத் தலைவர் / காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன்  தலைமை வகித்தார்.  இக்கூட்டத்தில் இக்குழுவின் அலுவல் காரணமாக உறுப்பினரான மாண்புமிகு பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் / மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை  இக்குழு உறுப்பினர்களான சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன்  சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்  ம.கீதா  வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம்


  மதுரை (மத்திய) சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் அவர்கள், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் .அ.மருதமுத்து  கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர்  மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன்  மற்றும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர்ஆர்.எம்.சின்னதம்பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். 
 


சென்னை தலைமைச் செயலகத்தின் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன்  ஆய்வுக் குழு விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் ப.பத்மகுமார்  துணைச் செயலாளர்கள் பி.தேன்மொழி மற்றும் பா.ரேவதி ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2018-2020 ஆம் ஆண்டிற்கான பொது கணக்குக் குழு கடந்த 05.07.2018 அன்று அமைக்கப்பெற்று 31.03.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழு அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலையில் அமைந்துள்ள கூடுதல் பயணியர் சுற்றுலா மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழுத் தலைவர் / மாண்புமிகு எதிர்கட்சி துணைத் தலைவர் / காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் திரு.துரைமுருகன் அவர்கள் தலைமையில் கூடி, குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 



அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழுத் தலைவர் எதிர்கட்சி துணைத் தலைவர் / காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலைய வளாகத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டுவரும் ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.


பின்னர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழுத் தலைவர்  எதிர்கட்சி துணைத் தலைவர் / காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்  இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் 2012-2013 முதல் 2016-2017 வரை உள்ள ஆண்டுகளுக்கான உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் பிரிவு தணிக்கை, பொது மற்றும் சமூக பிரிவு தணிக்கை, பொருளாதாரப் பிரிவு தணிக்கை, மாநில நிதிநிலை தொடர்பான அறிக்கைகளில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தணிக்கைப் பத்திகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்துத் துறைகளின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
 


அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழுத் தலைவர் எதிர்கட்சி துணைத் தலைவர் / காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன்  தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சங்கர் நகர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கு சென்று அங்கு விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சலுகைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.


பின்னர், கனிமவளத் துறையின் சார்பில் சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கெஜல்நாயக்கன்பட்டியில் இயங்கிவரும் தனியார் கல்குவாரி மற்றும் எம்.சான்ட் தயாரிக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. இக்குழு சேலம் மாவட்ட ஆய்வினை முடித்துக் கொண்டு நாமக்கல் மாவட்டம் புறப்பட்டுச் சென்றது.இக்கூட்டத்தில் சேலம் மாநகர காவல் ஆணையர் த.செந்தில்குமார் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன் உள்ளிட்ட அனைத்து துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Previous Post Next Post