கோவையில் மேக்ஸ் சூப்பர் குடும்பம் 2020 -நடுவராக பிரபல கோலிவுட் நடிகை அதுல்யா ரவி!! 

கோவையில் மேக்ஸ் சூப்பர் குடும்பம் 2020. நிகழ்ச்சியில் நடுவராக பிரபல கோலிவுட் நடிகை அதுல்யா ரவி கலந்துகொண்டார். இறுதி போட்டியில் 25 குடும்பங்கள் போட்டியில் தகுதி பெற்று ‘மேக்ஸ் சூப்பர் குடும்பம்’ தலைப்பை வென்றது.இந்தியாவின் முன்னணி பிராண்ட் மேக்ஸ் பேஷன், கோவையில் வியப்பூட்டும் ‘மேக்ஸ் சூப்பர் குடும்பம் 2020’ நடத்தியது. பிரபல கோலிவுட் நடிகை அதுல்யா ரவி மற்றும் முன்னணி தமிழ் மாத பத்திரிக்கையாளர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். மேக்ஸ் சூப்பர் குடும்ப நிகழ்ச்சியை மேக்ஸ் பேஷன் ஏற்பாடு  செய்திருந்தது. குடும்பத்தினர் தங்களுக்குள் பயனுள்ள முறையில் நேரத்தை செலவிட  இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இறுதி போட்டியில் 25 குடும்பங்கள் போட்டியில் தகுதி பெற்று ‘மேக்ஸ் சூப்பர் குடும்பம்’ தலைப்பை வென்றது. சூப்பர் குடும்பம் பற்றி, மேக்ஸ் பேஷன் தமிழ்நாடு மண்டல மேலாளர் திரு. ஹரிஷ் குமார் கூறுகையில், ‘‘ இது முதலாவது பதிப்பு.இனி தொடர்ந்து  வாடிக்கையாளர்களை இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க செய்து, பொழுதுபோக்காகவும், புதுமையாகவும் அவர்களது திறனை வெளிப்படுத்துவோம். சூப்பர் குடும்பம், தங்களது முன்னேற்றத்தில் எண்ணங்களை வெளிப்படுத்தி, தரமான முறையில் திறமையை வெளிப்படுத்தும் குடும்பங்களை ஊக்குவிக்க நடத்தப்படுகிறது, ’’ என்றார்.நடுவராக செயல்பட்ட நடிகை அதுல்யா ரவி கூறுகையில், ‘‘ இது போன்ற அருமையான நிகழ்ச்சியில் இந்த நகரில் பங்கேற்க வாய்ப்பளிப்பதற்கு மிக்க நன்றி.  உற்சாகமும், ஊக்கமும் கொண்ட குடும்பங்களை  பார்க்கும்போதும், அவர்களது திறனை வெளிப்படுத்த மேற்கொண்ட முயற்சியும் மிக பெருமையாக உள்ளது.


மேக்ஸ் முன்னணி பிராண்ட், தற்போது மேக்ஸ்பேஷன்.காம் என்ற ஆன்லைனில் கிடைக்கிறது. ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன் ஆப்புகளில் வாடிக்கையாளர்கள் துணிகளையும், காலணிகளையும் தேர்வு செய்து வாங்கலாம். மாபெரும் விலையில் நவீன பேஷன் என்ற பெயரில், நாடு முழுவதும் முன்னணி விற்பனையாளராக உள்ளது. சர்வதேச தரத்திலான துணிகளை இதில் வாங்க முடியும். இது போன்றே தரமான காலணிகளும் மற்றும் பல அத்தியாவசிய இணை பொருட்களையும் வாங்க முடியும்.  சர்வதேச அளவில் 19 நாடுகளில் 400 கடைகளிலும், 100 நகரங்களில் 250க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை மேக்ஸ் கொண்டுள்ளது.