உலக பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உலக பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடா வருடம் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்ச்சக்கணக்கில் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில் மிகவும் பழைமை வாய்ந்த கோவில் ஆகும்.



1942-ம் ஆண்டு வெளியிட்ட நூல் குறிப்பில் பாரியூர் முன்பு பாராபுரி என்று அழைக்கப் பட்டதாக உள்ளது. பாரியூரில் நான்கு திருக்கோவில்கள் உள்ளன.


காணாபத்தியம் - கணபதி வழிபாடு 


கௌமரம் - முருகன் வழிபாடு


சௌரம் - சூரிய வழிபாடு


சாக்கும் - சக்தி வழிபாடு


சைவம் - சிவன் வழிபாடு


வைணவம் - திருமால் வழிபாடு  


ஆகிய ஆறு சமைய கடவுள்களுக்கும் ஆலயங்கள் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. 



பாரியூர் கொண்டத்து காளியம்மன் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் ஆன் வேடத்தில் அருள்பாலிப்பார். நவராத்திரியில் வரும் சனிக்கிழமையில் திருப்பதி வெங்காச்சலபதி அலங்காரத்திலும் பண்டிகை நாட்களில் தேர் வெள்ளோட்டத்தின் போது அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும் குண்டத்திற்கு முன்தினம் குதிரை வாகனத்தில் குமாரராஜா அலங்காரத்திலும் காட்சி தருவார். அணைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருடம் தோறும் நடை பெறும் குண்டம் திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 



கோபியில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் 3வது கிலோ மீட்டரில் இத்திருக் கோவில் அமைந்துள்ளது. காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். காலை 6.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகம் நடை பெரும். 7 மணி, 9 மணி, 10.30 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என்று 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.


Previous Post Next Post