பழனி மலைக்கு நம்ம ஊரு ஸ்டைலில் வந்த ஆஸ்திரேலியமாணவர்கள்


பழனி முருகன் கோயிலில் அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மாணவர்கள் தமிழர் பாரம்பரியபடி உடை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ராட்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் டக்ளஸ் புரூஸ். இவர் பழனி முருகன் கோயிலில் நவபாஷணத்தால் செய்யப்பட்ட முருகன் திருமேனி மற்றும் அதன் மருத்துவ ரகசியத்தால் ஈர்க்கப்பட்டு முருகனின் தீவிர பக்தராக மாறியுள்ளார்.



மாணவர்களுக்கு முருகனின் பெருமைகளை எடுத்துரைத்தது, அவர்களுடன் ஆண்டுதோறும் பழனி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார். இதன்படி, தற்போது 13-வது ஆண்டாக கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்களுடன் முருகன் கோயிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்தார். தமிழர் பாரம்பரிய முறைப்படி அவர்கள் வேட்டி, சேலை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்ததை உள்ளூர் பக்தர்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.



Previous Post Next Post