நத்தத்தில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

 


 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேலம்பட்டியில் யூனியன் அலுவலகம் முன்பு உள்ள சமுதாயக் கூடத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதற்கான விளக்க பொதுக்கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் நத்தம் ஒருங்கிணைப்பாளர் சொக்கர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர்  ஶ்ரீநிவாசன் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பல்வேறு வினாக்கள் கேட்டு அதற்கு குறித்து முழுமையான தகவலை பெற்று கலந்துரையாடினர்.இதில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கூட்டத்தில் விளக்கங்களை  அளித்துப் ஶ்ரீநிவாசன்  பேசினர்.

 

இந்த நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளராக போஸ், மாவட்ட நிர்வாகிகளான முத்துராமலிங்கம்,ராஜா, சுரேஷ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வராஜ், வீரராகவன், சுதாகர், ராஜேந்திர பிரசாத், வெள்ளையன்,முருகேசன், கார்த்திகைசாமி, சௌந்திரபாண்டி,செல்லதுரை உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின் நிருபர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் பேட்டியளித்தார்  அப்போது அவர் பேசியதாவது:

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தேவையில்லாத குழப்பங்கள் குறிப்பாக திமுக போன்ற கட்சிகள் உருவாக்கிய  குழப்பங்கள் திட்டமிட்டே பாரதிய ஜனதா கட்சியின் நன்மதிப்பை  குலைக்க வேண்டும் பிரதமருக்கும் மீது விமர்சனங்களையும் தாக்குதலையும் கொடுக்க வேண்டுமென திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள்  செயல்படுகின்றன.

 

சில இஸ்லாமிய அமைப்புகள்  பயங்கரவாதத்தை தூண்டும் விதமாகவும் பேசி வருகின்றனர். இதனால் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நாங்கள் எல்லா இடங்களிலும் மக்களிடம் சட்டம் குறித்து குடியுரிமை சட்டத்தை பற்றி விளக்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துகிறோம் இன்று நத்தத்தில் அரங்க கூட்டம் நடைபெற்றது இதன் நோக்கம் குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை குறிப்பாக  இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கு  எந்த பாதிப்பும் இல்லை என்பதை  விளக்குவதற்காகவே இக் கூட்டங்கள் நடைபெறுகிறது இவ்வாறு அவர் பேசினார்.\