நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம்!!

நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம் நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சி சத்திரப்பட்டி பொதுகளம் அருகில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொடுமுடி வட்டாட்சி வளர்ச்சி அலுவலர் சக்திவேல்,  கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சோமசுந்தரம், கொடுமுடி ஒன்றிய பெருந்தலைவர் லட்சுமி ராஜேந்திரன், கொளாநல்லி ஊராட்சி மன்ற தலைவர் பேபி செந்தில்குமார்,  துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் (எ) சின்ன நவநீதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயல் அலுவலர் சுதா மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கிராமசபா கூட்டம் முடிவில் மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறிட தொழுநோய் இல்லாத உலகத்தை படைப்போம் என கொடுமுடி சுகாதார ஆய்வாளர் பி.டி. தங்கவேல் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.