திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா 

 


திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.  இதில் ஊராட்சிகள் இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் ஒன்றிய கவுன்சிலர்கள்  8 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் 


 1-வது வார்டு கவுன்சிலராக  அதிமுக வேட்பாளர் சொர்ணாம்பாள்,  2 -  வது வார்டு கவுன்சிலராக சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற தேவிஸ்ரீ,  3 - வது வார்டு கவுன்சிலராக  திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற  ரத்தினாம்பாள்,  4 - வது வார்டு கவுன்சிலராக அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சங்கீதா சந்திரசேகர், 5 - வது வார்டு கவுன்சிலராக அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஐஸ்வர்யா  மகராஜ், 6 -வது வார்டு கவுன்சிலராகா  காங்கிரஸ் ஜானகி 7 - வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற பாலசுப்பிரமணி  8 - வது வார்டு கவுன்சிலராக  அதிமுக வேட்பாளர்  கல்பனா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.