வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம்-ஈரோடு கலெக்டர்அறிவுரை !

பணிக்கு செல்லும் பெண்கள் அனைவரும் உடல் நலத்தை பாதுகாக்க நாள்தோறும் உடற்பயிற்சி அவசியம்.



ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்  மாவட்ட நிர்வாகம் மற்றும் தீபா மெடிக்கல்ஸ் குழுமம் இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாமினை, மாவட்ட கலெக்டர் சி.கதிரவன்  தலைமையில், தீபா மெடிக்கல்ஸ் குழுமம் தலைவர்  வி.புருஷோத்தமன் மற்றும் ஈக்கோ சிம்னிஸ் நிறுவன தலைவர்  மல்லி.பி.பொpயசாமி ஆகியோர்  முன்னிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்   வணிகவரி  மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் கா.பாலச்சந்திரன் தொடங்கி வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தீபா மெடிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்கள் தங்களது உடல் நலனில் அதிக ஈடுபாடு காட்டுவது இல்லை. பெண்கள் தங்களது குடும்பத்தையும் மற்றும் அலுவலக பணிகளையும் ஒருங்கிணைந்து ஓய்வில்லாமல் மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் பணிக்கு செல்லும் பெண்கள் அனைவரும் தங்களது உடல் நலத்தை பேணிகாக்க நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இன்று வளர்ந்துள்ள அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப பெண்கள் எந்தவிதமான சிகிச்சைகளாக இருந்தாலும் அதனை முறையாக மருத்துவரின் அறிவுரைபடி ஏற்று கொள்ள வேண்டும். அதன்படி மார்பகப் புற்றுநோய் என்பது பரம்பரை நோயாக வரலாம். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப காலத்தில் இருமுறைகளில் மார்பக சுய பரிசோதனை மற்றும் மெமோகிராபி மூலம் கண்டறிந்து குணப்படுத்தலாம். திருமணம் ஆகாதவர்களுக்கும், குழந்தை இல்லாதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.மார்பகப் புற்றுநோய் தொற்று நோய் அல்ல. மார்பகப் புற்றுநோயானது அதிக எடை பருமன் உள்ளவர்களுக்கு காணப்படும். 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் அல்ல.


பெண் நிபுணர்களால் பெண்களுக்கு பரிசோதிக்கப்படுகிறது.  மேலும் பெண்கள் வேலைப்பழுவின் காரணமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் தாங்கள் பணிபுரியும் இடத்திலேயே மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையினை மேற்கொள்ள ஏதுவாக  (23.01.2020) முதல் 25.01.2020 வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் மார்பக புற்றுநோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் வகையில், மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன் ஏற்படும் பின்விளைவுகளை கண்டறிந்து உரிய சிகிச்சையும் அளிப்பதாகும். 



மேலும்  143 குழந்தைகளுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவி புரிந்துள்ளது.
மேலும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு  திட்டம் செயல்படுத்தி ஆகும் மொத்த செலவுகளை தானே ஏற்றுக் கொண்டுள்ளது. மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மூலம் நவம்பர் 2013 முதல் நவம்பர் 2017 வரை சுமார்  290 பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  


எனவே இம்முகாமில் பங்குபெற்றுள்ள அனைத்து அரசு பணிக்கு செல்லும் பெண்கள்  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மார்பக புற்றுநோயினை அறவே அகற்றிட இங்கு கூறப்படும் கருத்துக்களை நன்கு தெரிந்து கொள்வதோடு, பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்  மு.பாலகணேஷ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர்  முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  (பொது) ம.தினேஷ், துணை இயக்குநர்  (சுகாதாரப்பணிகள்) சௌண்டம்மாள், மு.சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை மருத்துவர்கள் சுமதி பத்மநாபன், சுஜாதா செந்தில்வேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



 


 


Previous Post Next Post