நித்யானந்தாவின் சீடர் கொலை: பரபரப்பு

 


புதுச்சேரி அருகே உள்ள ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல் (வயது45).


இவர் நித்யானந்தாவின் தீவிர சீடர், வஜ்ரவேலு நித்யானந்தா பேக்கரி என்ற பெயரில் ஏம்பலம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் பேக்கரி நடத்தி வந்தார்.


மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நித்யானந்தவின் ஆசிரமம் அமைப்பதற்கு இவரும் ஒரு காரணம். பல்வேறு விதங்களில் நிதியுதவியும் மற்ற வகைகளில் உதவி செய்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று இரவு 2 லட்சம் பணத்துடன் காரில் சென்ற வஜ்ரவேல், இரவு வீடு திரும்பவில்லை.


அவர் பாகூர் பகுதியில் காரில் கிடந்துள்ளார். 


இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நித்யானந்தா சீடர்ன் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Previous Post Next Post