நம்பியூர்  தீயணைப்பு மீட்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பு!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்அருகே உள்ள  நம்பியூர்  தீயணைப்பு மீட்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.அதனையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி பின்னர்  நிலையத்தின்  வாகனத்தை கொடியசைத்து இயக்கச் செய்தார். அருகில்  மாவட்ட அலுவலர் காங்கேயம் பூபதி , உதவி அலுவலர் வெங்கடாச்சலம், ஆவின் தலைவர் காளியப்பன்,ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,  நிலைய அலுவலர்கள் ஆறுமுகம், வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.