பெண் கைதி பற்றி பேச்சு: சசிகலாவை தாக்குகிறது தர்பார்?

 


தர்பார் படத்தில் அரசியல் இல்லை என்று இயக்குனர் முருகதாஸ் கூறியிருந்தார் ஆனால் படத்தில் இரண்டு காட்சிகளில் சசிகலாவை நேரடியாக தாக்கும் வகையில் வசனம் இடம்பெற்றுள்ளது.


ரஜினி ரசிகர்களன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தர்பார் படத்தில் ஒரு காட்சியில் ரஜினி ஜெயிலுக்குள் நடந்து சென்று கொண்டிருப்பார். அப்போது சிறைக்குள் ஒரு கைதி செல்போனில் பேசிக் கொண்டிருப்பார். இதனை பார்த்து சிறை வார்டனிடம் "உள்ளே செல்போன் எல்லாம் உண்டு போல " என்பார்.



அதற்கு அந்த சிறை வார்டன் "காசு இருந்தால் போதும் சார், ஷாப்பிங்கே போய்ட்டு வரலாம்" என்று பதில் அளிப்பார். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அவ்வப்போது சிறைக்கு வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாக கர்நாடக சிறைத்துறை ஐஜியாக இருந்த ரூபா கூறியதை குறிப்பிட்டு அந்த பிரச்சனையை எடுத்துக்கூறும் வகையில் சசிகலாவை இந்த காட்சியில் விமர்சித்து வசனம் இடம்பெற்று இருக்கிறது.


இதே போல் மற்றொரு காட்சியில் சிறைக்குள் ஆள்மாறாட்டம் நடைபெற்று இருக்கும். அது குறித்து ரஜினி உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைப்பார்.
அப்போது "நான் கூட தென் இந்தியாவிலும் இதே போல் சிறையில் இருந்து அவ்வப்போது ஒரு பெண் கைதி வெளியே போய் வருவதாக கேள்விப்பட்டேன்" என்பார். இதுவும் சசிகலாவை மனதில் வைத்து எழுதப்பட்ட வசனம்.


ரஜினிக்கு சசிகலா மீது அப்படி என்ன கோவமோ தெரியவில்லை முருகதாஸ் எழுதிக் கொடுத்த இந்த வசனத்தை பேசி அவரை அட்டாக் செய்துள்ளார் என்கிறார்கள் ரசிகர்கள்.



Previous Post Next Post