ஈரோடு மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் நாளை 24.1.2020 (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது. அதன்படி ஈரோடு தாலுகாவில் உள்ள  (1)எலவமலை கிராம நிர்வாக அலுவலகத்திலும்,  (2)மொடக்குறிச்சி தாலுகாவில் அனுமன்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், (3) கொடுமுடி தாலுகாவில் வெங்கம்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், (4) பெருந்துறை தாலுக்காவில் துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், (5) பவானி தாலுக்கா குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், (6) அந்தியூர் தாலுக்கா பூதப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம்,(7) கோபி தாலுக்காவில் சவண்டப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், (8)சக்தி தாலுகாவில் உக்கரம் மாரியம்மன் கோவில் வளாகத்திலும்(9) நம்பியூர் தாலுகாவில் கரட்டுப்பாளையம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில்,(10)  தாளவாடி தாலுகாவில் இட்டரை வனத்துறை வளாகத்திலும்நடைபெறுகிறது என ஈரோடு மாவட்ட கலெக்டர் C.கதிரவன் தெரிவித்துள்ளார்.