நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

சீர்காழி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சீர்காழி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சீர்காழி நகர கழக செயலாளர்  ஏ.கே.சுரேஷ் நகர பொருளாளர்  ஏ.அமீர் ஜான், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர்  முன்னாள் கவுன்சிலர்  முகமது யாசின், மாவட்ட இளைஞர்  அணி துணை செயலாளர்  ஆனந்த், நகர எம்.ஜி.ஆர்  மன்ற செயலாளர்  செந்தில் குமார் , தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர்  எம்.ஏ.அருண் பாலாஜி, சிறுபான்மை பிரிவு செயலாளர்  ராஜா முகமது, நகர தகவல் தொழில் நுட்ப அணி தலைவர்  ரா.ராஜதுரை, சீர்காழி நகர 20-வது வார்டு செயலாளர்  தினேஷ், நகர அம்மா பேரவை துணை செயலாளர்  கமலகண்ணன், நகர இளைஞர்  அணி தலைவர்  தீனா,  நகர இளைஞர்  அணி துணை செயலாளர் அஜீத் மற்றும் அ.ம.மு.க கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .