சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்ட துப்பாக்கி சாக்கடையில் இருந்து மீட்பு!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோடு சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார்.


இந்த சம்பவத்தில்,  பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 பேரும் கடந்த 20-ந் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.2 பேரையும் 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிகோரி போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட்டு 10 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.


  தொடர்ந்து பயங்கரவாதிகள் 2 பேரிடமும், நேசமணிநகர் போலீசார் விசாரணை செய்தனர். 


மேலும் கொலை சம்பவம் நடந்த இடம் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற இடங்களுக்கும் 2 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கேரளாவில்  தமிழக  போலீசார் இன்று கைப்பற்றினர். அந்த துப்பாக்கி சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது.