தந்தை பெரியார் சிலைக்கு எஸ்.கே.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை!பழனி ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும்(ஓய்வு)  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினருமான நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன்  மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

 


 

இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர் இளம் வயதிலேயே சமூகப்பணியில் ஆர்வம் உடையவராகவும் கல்லூரி படிப்பின் போது பல சமூக பணிகள் செய்து வந்ததாகவும் அரசுப் பணியின் காரணமாக இடையில் விட்டு விட்டு சென்று விட்டதாகவும் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தற்போது இணைந்துள்ளேன்  நான் விட்டுச் சென்ற அனைத்து சமூக சேவைகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர்  திருமாவளவன் அவர்களோடு இணைந்து அனைத்து தர மக்களையும் ஒன்றிணைத்து சேவைகள் செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.