அய்யய்யோ ஆவி... மயிலாடுதுறை பக்கம் இப்படியும் கிளப்புறாங்க...

 


மயிலாடுதுறை அருகே ஆவி நடமாட்டம் இருப்பது போல சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. இது சிலரை அச்சப்பட வைக்கிறது.சிலரை சிரிக்க வைக்கிறது.


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் குறிஞ்சி மளிகை கடை நடத்தி வருபவர் இப்ராஹிம். 


இவர் வழக்கம்போல் காலையில் கடை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அவர் கடைக்கு ஒருவர் வருவதுபோல் உருவம் சிசிடிவியில் தெரிந்துள்ளது.


கடைஉரிமையாளர் இப்ராஹிம் கடைக்கு வெளியே வந்து பார்த்த போது யாரும் வரவில்லை. அப்போது சந்தேகமடைந்த அவர் சிசிடிவி காட்சிகளை மீண்டும் சோதனை செய்து பார்த்தார். 


ஒரு உருவம் கடை க்கு வருவது தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் நேரில் யாரும் கடைக்கு வரவில்லை. இதனால் இப்ராஹிம் அச்சமடைந்துள்ளார்.


 அக்கம்பக்கத்தினரை கூப்பிட்டு வந்து சிசிடிவி காட்சிகளை காண்பித்துள்ளார். ஆவி ஆவி போல நிழல் உருவம் கடைக்குள் வருவதை அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 அப்பகுதி கடை உரிமையாளர் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக கூறி பயத்தில் உள்ளனர்.


இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. ஏதாவது பகுதியில் நிறைந்த மனித உருவத்தில் நிழல் காரணமாகவே போன்ற உருவம் பதிவாகி இருக்கலாம் என முற்போக்காளர்கள் கூறுகின்றனர்.


ஒரு தரப்பில் சிலரோ உண்மையில் ஆவி இருக்கிறது என்று பயப்படுகின்றனர். இதை என்ன இன்னொரு சிலர் காமெடி செய்து சிரிக்கிறார்கள். அது ஆவியா என்னங்க???