அனைவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்கு உதவுங்கள்

அனைவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்கு உதவுங்கள் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள்

 


 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பொதுமக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இனிய புத்தாண்டு தினத்தில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான, அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாட கேட்டுக்கொண்டுள்ளார். அனைவருக்கும்  பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்கு உதவுங்கள். "பாதுகாப்பு"  தானாகவே சிறந்த விவசாயம், வர்த்தகம், வணிகம் போன்றவற்றின் மூலம் சமுதாயத்தை முன்னேற்றும் சிறந்த சட்டவிதி சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும்.

 

அனைத்து சமூகங்களுக்கும் பயம், அச்சுறுத்தல்கள் இல்லாமல் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்வதும், செய்வதும் காவல்துறையின் நோக்கமாகும். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலை விதிகளை மதித்து நடக்கவும், காவலன் செயலி மூலம் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பு குறைகளை உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக இளைஞர்கள் கல்வி, விளையாட்டு, கலை போன்ற அனைத்து துறைகளிலும் சாதனையாளர்களாக மாறவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், கேட்டுக் கொண்டுள்ளார்.