ஆந்திரா மாநிலம் அடிவாரம் கொத்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண்யானை பலி

ஆந்திரா மாநிலம் அடிவாரம்  கொத்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண்யானை பலி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தூர் வனத்துறை எல்லைக்குட்பட்ட    ஆந்திர மாநிலம் அருகே ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் குடியாத்தம் வனத்துறை அலுவலக அதிகாரி அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்கள்தகவலறிந்த ரேஞ்சர் மகேந்திரன் மற்றும் வனவர் ரவி வனக் காப்பாளர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த ஆண் யானை இறந்ததைப் பற்றி அங்கு உள்ள ஊர் பொது மக்களிடம் விசாரணை செய்துள்ளார்.இது சம்பந்தமாக நிருபர்களிடம் கூறியது அதாவது காட்டு பன்றிகளை வேட்டையாட யாரோ சில மர்ம நபர்கள் மின்சாரமின் வேலி அமைத்து இருக்கலாம் என்று வனத்துறை ரேஞ்சர் மகேந்திரன் அவர்கள் கூறினார் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கொத்தூர் கிராமத்துக்கு நேரில் சென்று இறந்த யானையை பற்றி விசாரித்தார் இந்த ஆண் யானையை அதே இடத்தில் கால்நடை மருத்துவர்களை அழைத்து பிரேத பரிசோதனை செய்து அந்த மலை அடிஓரத்தில் புகைத்து அதிகாரிகள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்