ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர் தானாக சுருண்டு விழுந்து பலி!!!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகள் பாய்ச்சலும், காளையர் பாய்ச்சலும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டியை சுவாரசியமாக்கி வருகிறது. 


இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க வந்த ஒருவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண்பதற்காக செக்காணூரணி, ஊத்து பட்டி. மாயாண்டி மகன் செல்லப்பாண்டி (வயது 35)  என்பவர் வந்திருந்தார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவ ருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.


செல்லப்பாண்டி ஜல்லிக்கட்டு பார்க்க வந்த இடத்தில்  ஒரு கடையில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். கூல்டிரிங்ஸ்  குடித்த சிறிது நேரத்தில் தடுமாறி கீழே சுருண்டு விழுந்து உள்ளார். மயக்கமடைந்த அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு செல்லும் வழியில் செல்லப்பாண்டி இறந்துள்ளார். அவரது உடல் உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது.