பழனி ஜல்லிக்கட்டில் பாய்ந்து வந்த காளைகள்!!!

 


பழனியை அடுத்த நெய்க்காரபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளைகளை தீவிரமாக தயார்படுத்தி போட்டியில்கலந்து கொள்ள  செய்திருந்தனர் .

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டில் காளைகளும், அவற்றை அடக்கும் காளையர்களும் தங்கள் வீரத்தை நிலைநாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்கள் ஜல்லிக்கட்டுக்கு பிரபலமானதாக இருந்தாலும், பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதேபோன்று

பழனியை அடுத்த பெரியகலையமுத்தூரில் ஐகோர்ட் காளியம்மன் கோயில் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு இப்பகுதிகளில் பிரபலமானதாகும்.

  இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகளும், காளையர்களும் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், நெய்க்காரப்பட்டி, காவலப்பட்டி, சின்னக்காந்திபுரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் காளைகளை வளர்ப்போர் அவற்றிற்கு பிரத்யேகமாக பயிற்சிகள் அளித்து வந்தனர் வாடிவாசலை திறந்தவுடன் எதிரே நிற்பவர்களை முட்டி தூக்கி வீசும் அளவுக்கு அவற்றுக்கு ஆக்ரோஷமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு காளைகளை தயார்படுத்தும் வகையில் பச்சைத்தட்டு, புண்ணாக்கு மட்டுமின்றி வெள்ளைச்சோளம், குதிரைவாலி, பயறு வகைகள், கடலைப்புண்ணாக்கு போன்றவை வழங்கப்பட்டு ஊட்டமாக வளர்க்கப்படும்.

தோட்டத்திலேயே வாடிவாசல் போன்ற அமைப்பை வைத்தும் மண்ணைக்கிளற மண்மேடு அமைத்தும், 

இதேபோல் பல பயிற்சிகளை அளித்து இவ்விழாவில்  மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து 400 காளைகள் 300மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை சார் ஆட்சியர் உமா கொடியசைத்து துவங்கிவைத்தார் தாசில்தார் பழனிச்சாமி டிஎஸ்பி விவேகானந்தன், மற்றும் பழனி நகர காவல்  ஆய்வாளர் செந்தில்குமார், பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சையது பாபு, போக்குவரத்து ஆய்வாளர் ராஜன் மற்றும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

விழாக்குழுவினர்  ரிட்டையர்ட் டிஎஸ்பி முருகானந்தம், கோவிந்தராஜ், ரங்கநாதன், ஈஸ்வரன் ,முனியாண்டி, பெரியசாமி  தலைமையில் மாடுபிடி வீரர்களுக்கு பலமுறை பரிசு பொருட்களை வழங்கியும மாடுபிடி  வீரர்களை மக்களும் விழாக்குழுவினர் உற்சாகப்படுத்தினர்.