தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க சட்டத்தை திரும்பபெற வேண்டும். தமிழகஅரசிற்கு எல்ஜேகே நிறுவனத்தலைவர் நெல்லைஜீவா கோரிக்கை!!!

தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க சட்டத்தை திரும்பபெற வேண்டும்.
தமிழகஅரசிற்கு எல்ஜேகே நிறுவனத்தலைவர் நெல்லைஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.


சட்டமன்றத்தில் தமிழகஅரசு நிறைவேற்றியுள்ள "தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க சட்டம், 2019(Tamilnadu Bovine Breeding Act-2019)முற்றிலும் நாட்டுஇன காளைகளையும், எருமைகளையும் அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில் "கால்நடை அமைச்சகத்தின்" கீழ் புதியஅமைப்பு உருவாக்கப்பட்டு கால்நடை வளர்ப்போர் இந்த அமைப்பின் கீழ் கட்டாயமாக கொண்டுவரப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.இச்சட்டம் காளைகளை நேரடியாக இனவிருத்தியில் ஈடுபடசெய்யாமல் அதன் விந்தணுக்களை எடுத்து சேமித்து(Semen Bank)செயற்கை கருவூட்டலுக்கு(Artificial Insemination)பயன்படுத்துவர். தமிழ்நாட்டில் ஏறக்குறைய 85-லட்சம் மாடுகள் இருக்கின்றன அவற்றில் ஏறக்குறைய 70சதவீத பசுமாடுகளுக்கு ரூ50/-(ஐம்பது ரூபாய்) விலையில் அரசாங்கம் தருகின்ற மலிவுவிலை சினை ஊசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


ஆனால், இப்புதிய சட்டத்தால் சினை ஊசிகள் தயாரிப்பு தனியாரிடம் சென்றுவிடும் இதன்மூலம் ஒரு ஊசி ரூபாய் 3,000/-, 5,000/-(மூவாயிரம், ஐயாயிரம்) வரை விற்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் பிரிவு 3- ல்Certification of bulls, Registration of semen stations and AI service providersஎனும் தலைப்பில் எண் 12,12(1)(3)(7)(9)(10)காளைகள் வைத்திருப்போர் அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய அமைப்பில் பதிவுசெய்யவேண்டும் இல்லாவிட்டால் ரூபாய் 50,000/- (ஐம்பதாயிரம்) இருந்து 1,00,000/-(ஒரு லட்சம் வரை) காளை உரிமையாளருக்கு கட்டாய அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளது மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாது அதிகாரிகள் மாடு வைத்திருக்கும் விவசாயிகளின் பண்ணை, வீடு, தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து பதிவுசெய்யப்பட்ட காளைகள் முழு உடல் தகுதியுடன்(Fitness)உள்ளதா என்பதை ஆய்வுசெய்து,


 இல்லாதபட்சத்தில்(unfit)அந்த அமைப்பு காளைகளை கொல்லச்சொல்லும் இது நாட்டுஇன காளைகளையும்,எருமைகளையும் முற்றிலும் அழிக்க வழிவகுக்கும்.மேலும் அதிக பாலுக்காக ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன், ஜெர்சி போன்ற வெளிநாட்டு பசுக்களை இறக்குமதி செய்து அதற்கு செயற்கை கருவூட்டல் மூலம் இனவிருத்தி செய்து வெறும் பசும்கன்றுகளை மட்டும் ஈன தமிழகஅரசு இயற்றியுள்ள இச்சட்டம் வழிவகுக்கும்.எதிர்காலத்தில் மாடுகளை இனவிருத்தி செய்ய சினை ஊசிகளே ஒரே தீர்வு என்பதை நோக்கி இது நகர்த்தும்.எனவே, நாட்டுஇன மாடுகளை முற்றாக அழிக்க துடிக்கும் இச்சட்டத்தை ரத்துசெய்யவேண்டும் என லட்சிய ஜனநாயக கட்சியின்(எல்ஜேகே) சார்பில் தமிழகஅரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.



Previous Post Next Post