கீழ் குமாரமங்கலத்தில் இளைஞர் விளையாட்டு திட்டத்தினை துவக்கிவைத்தார்.

கீழ் குமாரமங்கலத்தில் கலெக்டர்  அன்புச்செல்வன் தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் இளைஞர் விளையாட்டு துவக்கிவைத்தனர்.

 


 

கடலூர் மாவட்டம் கடலூர் அடுத்துள்ள கீழ் குமாரமங்கலத்தில் காளி கோவில் திடலில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி கபடி வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். மேலும் அமைச்சர் உரையாற்றுகையில் மாவட்டத்தில் 683 கிராமங்கள் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது  இளைஞர்களிடையே நட்புறவு பாராட்டவும்  உடல் ஆரோக்கியமாக இருக்கவும்.

 

 மேலும்    கிராமப்பகுதியில் உள்ள இளைஞர்கள்  மற்றும் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தவும் இந்த இளைஞர் விளையாட்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்  அரசு அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்கள் இளைஞர்கள் விளையாட்டை கண்டு ரசித்தனர்.