கோடங்குடி ஊராட்சி 3-வது வார்டில் புகார் பெட்டி திறப்பு


கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கோடங்குடி 3 வது வார்டில் புகார் பெட்டி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 


 


 

இந்த ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆறு வார்டுகளாக பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.  சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மூன்றாவது வார்டு உறுப்பினராக வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாய சங்கத் தலைவர் தயா பேரின்பம் பொது மக்களால் தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல் பணியாக மூன்றாவது வார்டில் புகார் பெட்டி வைத்து பணியை தொடங்கினார். பேருந்து நிலையம் , பள்ளி வளாகம் முன்பு ,கோயில் வளாகம் முன்பு போன்ற மூன்று இடங்களில் புகார் பெட்டி களை அமைத்தார். மூன்றாவது வார்டு பொதுமக்கள் அவர்களின் குறைகளை இந்த பெட்டிகள் மூலம் தெரிவிக்க வேண்டும். புகார் அளித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் குறைகளை புகார் பெட்டியில் தெரிவிக்க வேண்டும் எனவும் தயா பேரின்பம் கேட்டுக்கொண்டார்.

 

பின் 3வது வார்டு சேர்ந்த மோகன் என்பவர் புகார் பெட்டியில்  புகார் மனு அளித்திருந்தார். மனுவில் கூறியதாவது  மூன்றாவது வாடு தெருக்களில் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இதனால் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுகிறது மேலும் பல நோய்கள் ஏற்படுகிறது ஆகவே இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை மனுவை புகார் பெட்டியில் அளித்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட  தயா பேரின்பம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்து தரப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள் பாலமுருகன், செல்வம், முருகப்பன், தியாகு, பெரியசாமி, சிலம்பரசன், குள்ளன், அருண், இளையபெருமாள், ரீட்டா, பட்டத்தால், அபி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.