சேலம் மத்திய சிறையில் காலியாகவுள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்!

சேலம் மத்திய சிறையில் காலியாகவுள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


சேலம் மத்திய சிறையில் காலியாகவுள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் டி.தமிழ்ச்செல்வன்  தெரிவித்ததாவது.
சேலம் மத்திய சிறையில் காலியாகவுள்ள ஒரு துப்புரவு பணியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு  (15700/- 50000/-) என்ற ஊதிய விகிதத்தில் தகுதி வாய்ந்த ஆண்/பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னுரிமை  பெற்றவரில் பொதுப்பிரிவில் ஒரு பணியிடம் இதில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.  


உட்பிரிவினருக்கு விதிகளின்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.  மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை (பணிவிபரக்குறிப்பு, செல்போன் எண் குறிப்பிட்டு) சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு முகவரியிட்டு பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பிட வேண்டும்.  நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.  மேலும், இவ்விண்ணப்பங்கள் 25.01.2020-க்குள் சேலம் மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும், சுய விலாசமிட்ட உறையில் ரூ.22/-க்கான அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பப்பட வேண்டும்.  இப்பதவிகளை நிரப்புவதற்கான நேர்காணல் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் பின்னர் தெரிவிக்கப்படும் மேற்குறிப்பிட்ட தேதிக்குப்பின் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.


 மேலும், முன்னுரிமை பெற்றவர்களுக்கு விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.  வயது வரம்பு (01.07.2019-ன்படி) குறைந்தபட்ச வயது வரம்பு (முடித்தவர்கள்) 18 வயது, அதிக பட்ச வயது வரம்பு ஆதிதிராவிடர்/அருந்ததியர்/பழங்குடியினருக்கு 35 வயது, மிகவும் பிற்படுத்தப் பட்டோர்/சீர்மரபினர்/பிற்படுத்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு 32 வயது, மற்ற பிரிவினர் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர்/பிற்படுத்தப்பட்டோர் /பிற்டுத்தப்பட்டோர் முஸ்லீம் அல்லாதவர் ஆதிதிராவிடர் /அருந்ததியர்/பழங்குடியினர் தவிர) 30 வயது ஆகும். மேலும், துப்புரவு பணியாளருக்கு எழுத படிக்க தெரிந்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படும்.  மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் டி.தமிழ்ச்செல்வன்  தெரிவித்துள்ளார். 


Previous Post Next Post