கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர்களுக்கான அறிமுகப் பயிற்சி !

கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர்களுக்கான அறிமுகப் பயிற்சி  


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர்களுக்கான அறிமுகப் பயிற்சி  மாவட்ட ஆட்சியரகம், அருகில் அமைந்துள்ள நாகர்கோவில் ‘ரோட்டரி கம்யூட்டி சென்டர்   கூட்டரங்கத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இப்பயிற்சி அகஸ்தீஸ்வரம், தோவாளை, இராஜாக்கமங்கலம் மற்றும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கான தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு 22.01.2020 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரையிலும்  தக்கலை, திருவட்டர், கிள்ளியூர், முஞ்சிறை மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கான  தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு 23.01.2020 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரையிலும் நடைபெறும். இப்பயிற்சியில் அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்கள். 


Previous Post Next Post