எதற்கு தறி போத்தீஸ் தான் சரி என்ற விளம்பர வாசகத்தல் சர்ச்சை

நெசவாளர்களை வருத்தம் அடைய செய்யும் சர்ச்சைக்குரிய விளம்பரம் எதுக்கு தறி?



உள்ளூர் நெசவாளர்களை புறக்கணிக்க சொல்லும் போத்தீஸ் விளம்பரம் கண்டனத்துக் குரியது என்று கைத்தறி நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர். வியாரபாரத்திற்காக விளம்பரம் கொடுப்பது சரி தான், அதற்காக அடுத்தவர் பொழப்பில் மண் அள்ளி போடக்கூடாது. சேலம் மாவட்டம் கைத்தறி நெசவுக்கு புகழ்பெற்றது. மக்கள் பாராம் பரியமாக தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிக்களுக்கு கோஆப்டெக்ஸ் அம்மாபேட்டை கைத்தறி, சொசைட்டி, சேலம் பட்டு, அறிஞர் அண்ணா பட்டு சொசைட்டி என தேடிச் சென்று ரிபேட்டில் ஜவுளிகளை எடுத்து கைத்தறி நெசவாளர்களை நேரிடையாக வாழ வைப்பது வழக்கம்.  அதே இளம்பிள்ளை, சிவதாபுரம் போன்ற கிராமங்களில் தெரிந்த தறிக்காரர்களிடம் நேரிடையாக மனத்திருப்தியோடு துணிகளை வாங்குவார்கள். அவர்களும் நியாயமான விலையில் துணிகளை விற்பார்கள். வணிகத்தை தாண்டி ஒரு நல்லுறவு மக்களுக்கும் நெசவாளர்களுக்கும் உண்டு. அதை குலைக்கும் விதமாக எதுக்கு தறி என்ற போத்தீஸ் விளம்பரம் உள்ளது. போத்தீஸ் கடை துணிகள் மட்டும் என்ன வானத்திலிருந்து வந்தவையா? அவர்கள் கோடிக்கணக்கில் செய்யும் விளம்பர  செலவையும் அந்த ஜவுளி விலையில் தான் சேர்ப்பார்கள். விளம்பரத்தில் ஒரு நியாயம் வேண்டாமா? சமூக அக்கறை வேண்டாமா?  உடனடியாக இந்த விளம்பரத்தை வாபஸ் பெற வேண்டும் என தறி நெசவாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Previous Post Next Post