ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு விழா.
ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு விழா.

 


 

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா அரசங்குடி  ஊராட்சி மன்ற தலைவராக  மஞ்சாயி பரமசிவம் பொதுமக்களின் ஆதரவு பெற்று  தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதவி ஏற்பு விழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

விழாவில்  தேர்தல்  அலுவலர் எம்எஸ் சிவக்குமார் கலந்துகொண்டு  மஞ்சாயி பரமசிவம் ஆகியோருக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

 


 

சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி  மாநில  செயலாளர் வழக்கறிஞர் திரு மார்பன் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.  பின்னர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் வழங்கியும் பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர் மணிவாசகம் வார்டு உறுப்பினர்கள் ஜெயக்கொடி அருள்ஜோதி சின்னசாமி மலர்கொடி கொளஞ்சி மாரியம்மாள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.