நேஷனல் ஸ்கேட்டிங் போட்டியில் பிரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

 


 

இந்திய கிராமப்புற விளையாட்டு கழகம் சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் நேஷனல் சேம்பியன்ஷிப் 2019-2020 நேஷனல் அளவிலான ஸ்கேட்டிங் போட்டி பெல்காமில் (கார்நாடக) நடைபெற்றது. போட்டியில் கார்நாடக, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கோவா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அதில் திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைசேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன், எம். ஷோபன் கலந்து கொண்டு 13 வயதிற்குட்பட்டோர்களுக்கான இன்லைன் ஸ்கேட்டிங்கில் 500 மற்றும் 1000 மீட்டர் குழு ஓட்டத்தில் நேஷனல் அளவில் மூன்றாமிடம் பெற்று தமிழகத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தாளாளர் டாக்டர்.சிவசாமி, பள்ளியின் இயக்குனர் சக்திநந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், மற்றும் பயிற்சியாளர் ராஜா ஆகியோர் பாராட்டினார்கள்