தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 71 போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு!

தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 71 பேருக்கு S.P. அருண் பாலகோபாலன்,வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் முறைப்படி சீராக பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொண்டு அந்த வாகனங்களை ஓட்டும் காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்தார்பின்னர் மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்குகளின் புலன்விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார்.


பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 71 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.


இக்கூட்டத்தில் தூத்துக்குடி உறைவிட மருத்துவ அதிகாரி சைலஸ், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரி ரமேஷ், உதவி இயக்குனர் அரசு குற்ற வழக்குகள் தொடர்புத்துறை கண்ணன், அரசு உதவி வழக்கறிஞர்கள் முருகப்பெருமான், ஆனந்தன், அசோக், ஆலன் ராயன், சேது, வசந்த், முருகேசன்,


காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் பிரகாஷ், தூத்துக்குடி ஊரகம் கலைக்கதிரவன், சாத்தான்குளம் பால்துரை, திருச்செந்தூர் பாரத், விளாத்திகுளம் பீர் முகைதீன், மணியாச்சி ரவிச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் சுரேஷ்குமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பழனிக்குமார், நில மோசடி தடுப்பு பிரிவு பிரதாபன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.