சிம்கார்டு முறைகேடுகளை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் !!

ஈரோடு மாவட்டத்தில் சிம்கார்டு முறைகேடுகளை தடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஸ் அவர்களின் உத்தரவின்படி, விழிப்புணர்வு கூட்டங்கள் ஈரோடு நகரம், பவானி,கோபி, சத்தி மற்றும் ஈரோடு ஊரக கோட்டங்களில் காவல் துனை கண்காணிப்பாளர் களின் தலைமையில் நடத்தப்பட்டது.



இதில் கூட்டத்தில் உள்ள செல்போன் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அதில் கடை உரிமையாளர்களுக்கு சிம்கார்டு முறைகேடுகள் தடுப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.மேலும் சாலை ஓரங்களில் கடை அமைத்து செல்போன்கள் விற்பனை செய்வதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, வெளிமாநில நபர்கள் இம்மாவட்டத்தில் பணிபுரிந்து கொண்டு புதியதாக சிம் கார்டுகள் வாங்க முயற்சித்தால் அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவன அடையாள அட்டை மற்றும் நிறுவன உரிமையாளர்களின் அனுமதி கடிதம் ஆகியவற்றுடன் புதிய சிம் கார்டுகள் வழங்க வழங்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி சட்டவிரோதமாக சிம்கார்டுகள் வாங்குவோர் மீதும் சிம்கார்டு விற்பவர்கள் மீதும் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.



 


Previous Post Next Post