அதிரடியாக 100 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்

தொழில் உரிமம் இல்லாத சுமார் 100 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல்.பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தொழில் புரிவோா் தங்கள் தொழிலுக்கான உரிமத்தை அடுத்த ஒரு வாரத்துக்குள் பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-இன் கீழ் பிரிவு 279, 287, 288, 299(1), 304, 309-இன் படி உரிமம் பெறுவது கட்டாயமாகும்.இதை மீறி தொழில் உரிமம் பெறாமல் இயங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் உரிமம் பெறாத நிறுவனங்கள் அடுத்த ஒரு வாரத்துக்குள் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி கடந்த வாரம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post