புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் திறப்பு விழா
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, குள்ளம்பாளையம் ஊராட்சியில்  ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை தமிழக  பள்ளிக்கல்வி துறை  அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்  குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்து, 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கினாா். மேலும் பாதுகாப்பு பெட்டக அறையை கம்பன் கல்வி நிலைய தாளாளர் பி. பி. காளியண்ணன் திறந்து வைத்தார். விழாவானது கூட்டுறவு சங்க இணைபதிவாளர் எஸ். பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. விழாவில்  துணை பதிவாளர்கள் ஏ. அழகிரி, ஆர். முத்துச்சிதம்பரம், முன்னாள் சிட்கோ சேர்மன் சிந்து ரவிச்சந்திரன், ஆவின் தலைவர் காளியப்பன்,கூட்டுறவு சங்க செயலாளர் கே. கே. மயில்சாமி,  முன்னாள் முனிசிபல் சேர்மன் கந்தவேல் முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

  

Previous Post Next Post