மார்ச் 11ஆம் ந்தேதி பழனி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் விளங்குகிறது. பழனி கிழக்கு ரதவீதியில் இந்த கோவில் அமைந்துள்ளது.

 


 

பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாரியம்மன் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் கோவிலில் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா முகூர்த்தக்கால் நாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.   மேல்மாரியம்மன் கோவில் சன்னதியில் முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முகூர்த்தக்கால் நிகழ்ச்சியை காண கோவில் நுழைவு வாயிலின் வடகிழக்கு பகுதியில் மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டது. அதையடுத்து முகூர்த்தக் காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 


 

நிகழ்ச்சியில் பழனி கோயில் நிர்வாக செயல் அலுவலர் ஜெயச்சந்திரபானுரெட்டி  துணை ஆணையர் பொறுப்பு செந்தில்குமார் கண்பத் கிராண்ட் உரிமையாளரை ஹரிஹர முத்து சரவண பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் முனைவர் பாஸ்கரன் பழனி சரக காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தன் சூப்பிரண்டு முருகேசன் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி வருகிற 25-ந் தேதி திருக்கம்பம் சாட்டும் விழாவும், 3.3.2020-ந் தேதி கொடியேற்றமும், கம்பத்தில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், 10.3.2020-ந்தேதி திருகல்யாணமும், 11.3.2020-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகள்  கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

Previous Post Next Post