திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பாள் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

 


 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை பகுதியை சேர்ந்தவர் கந்தராஜ். இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடுகட்டி வருகிறார்கள். கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடத்திற்கு தினமும் தண்ணீர் விடுவது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று கந்தராஜ் மகன் ராகுல் வயது 14 . கட்டுமானத்தை தண்ணீர் விட்டு நனைப்பதற்காக சென்றுள்ளார். மோட்டார் போடுவதற்கு பக்கத்து வீட்டில் இருந்து மின் வயர் மூலம் மின்சாரம்  எடுக்கும் போது ராகுல் உடலில் மின்சாரம் தாக்கி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.