ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த 17  குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக்கொலுசு: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 17  குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.


 திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடடு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தங்க மோதிரம், கொலுசு இலவசமாக வழங்கப்படும் என திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்து இருந்தார். அதன் படி இன்ற்உ மாலை திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு, தங்க மோதிரம், கொலுசு ஆகியவற்றை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிறந்த அன்றே தஙகள் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், கொலுசும் கிடைத்ததை எண்ணி குழந்தைகளின் தாய்மார்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 


Previous Post Next Post