கொத்து கொத்தாக சடலங்களை மீட்ட கொடுமை: தூக்கத்தில் 20 பேரின் உயிரை பறித்த படுபாவி டிரைவர் -அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம்

வீடியோ இதோ: 


 



 


பெங்களுரூவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம்  நோக்கிச்  கேரள அரசு சொகுசு பஸ் இன்று அதிகாலை (வியாழக்கிழமை )  3 மணியளவில் அவிநாசி அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்ஸில் 48 பேர்  பயணம் செய்து கொண்டு இருந்தனர். சொகுசு பஸ் என்பதால் பஸ்ஸில் வந்த அனைவருமே தூங்கி கொண்டு இருந்தனர்.


அப்போது எதிர் வழியில் சேலம் நோக்கி டைல்ஸ் ஏற்றிக்கொண்டு கண்டெயினர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி டிரைவர் திடீரென்று கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்டெயினர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் மையத் தடுப்பை தாண்டி கண் இமைக்கும் நேரத்தில், துளி கூட வேகம் குறையாமல் ரோட்டின் மறுபக்கம் பாய்ந்தது. 



அப்போது என்னவென்று சுதாரிப்பதற்குள் கேரள அரசு சொகுசு பஸ்ஸும், கண்டெயினர் லாரியும் பலமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சொகுசு பஸ்ஸில் வந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே தூக்கத்திலேயே பலியாகினர். 



பஸ் மோதிய வேகத்தில் பலத்த சேதமடைந்தது. பஸ்ஸின் பாதி பகுதி உடைத்துக்கொண்டு போய் விட்டது.  இடிபாடுகளுக்குள் சிக்கியதால்  காயமடைந்திருப்பார்கள் என்று எண்ணிய நிலையில் மொத்தமாக 19 பேர் பலியாகினர். 



அவிநாசி காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் போராடி பஸ்  விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். 



லாரி ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் ஒரு நிமிட கண் அயர்வு தூக்கம் 20 பேரின் உயிரை பறித்து உள்ளது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தின் மீட்பு பணிகளில் கொத்து கொத்தாக சடலங்களை எடுத்து வந்த காட்சி நெஞ்சை பிழிவதாக இருந்தது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. பஸ்ஸில் வந்த அனைவருமே காயமடைந்து உள்ளனர். கோவை, திருப்பூர் மறுத்த்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்துக்கு காரணமாக இருந்த கண்டெயினர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். 


 


எர்ணாகுளத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, கோபிகா, சர்ஷ்மா, பிரவீன், மாதேவ், தன்கஜன், தேவி துர்கா, சனோப், மனாசி மணிகண்டன், ஜோர்டின், அனு, அனுமேரி, பின்சி, ராப்ஹேல், பின்னு பாய்ஜூ, ஜோஸ்குட்டி, ஜாஸ்மின்,  ராசைட்,  அலன் சர்லஸ், மாலாவாட், நிபின்பேபி, டாமன்ஸிராபிரா,  கிரிஸ்டோ,
 திருச்சூரை சேர்ந்த நசீப் முகமத், அலன்சன்னி, ஜோபிபியூல்,ரோஸ்லி, சோனா, கிரண்குமார்,  ஹனிஷ், மதுசூதனவர்மா, அனு, யேசுதாஸ், ஜூசஸ்முகாண்டஸ், அஜய் சந்தோஸ், தாமஸ் டேவிட், ராமசந்திரன்,  மாரியப்பன், இக்னாட்டிஸ் தாமஸ், வினோத், அகில், ஸ்ரீலஷ்மிமேனன்,
பாலக்காட்டை சேர்ந்த சந்தோஸ்குமார், ராகேஷ்,  பிரதீஷ்குமார், சிவக்குமார்,
ஆகிய


 


48 பேர் பயணம் செய்துள்ளனர்.


 மொத்தம் 11 பெண்கள், 37 ஆண்கள் பயணம் செய்தனர். பெரும்பாலனோர் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் வேலை புரிபவர்கள்.  இதில் 6 க்கு மேற்பட்ட  பெண்கள் பலியாகி இருக்கலாம் என தெரியப்படுகிறது.  இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மீதமுள்ள  28 நபர்கள் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த 48 பேரில் பலியான 20 பேரின் விபரம் இனிமேல் தான் தெரியவரும்.  பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 



 


Previous Post Next Post