அனகாபுத்தூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பு

சென்னை அடுத்த அனகாபுத்தூர் 7 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் தவிப்பு..


சென்னை அடுத்த அனகாபுத்தூர் 7 வது பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் அப்பகுதியில் இதுவரை சாலை வசதி,கால்வாய் வசதி,தண்ணீர் வசதி போன்ற அன்றாட வாழ்க்கையின் முக்கியத்துவமான எந்த ஒரு வசதியும் இது வரை அரசு செய்து தரவில்லை என்றும்..இது குறித்து பல முறை அனகாபுத்தூர் நகராட்சி அதிகாரிகளிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும்,மனு அளித்தும் முதல் அமைச்சருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தும் தற்போது வரை தங்கள் இருபிடத்தை வந்து கூட யாரும் பார்க்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.


மேலும் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வசதி இல்லாமலும் சாலை வசதி இல்லாத காரனத்தினாலும் மழை நீர் ஆங்காங்கே தேங்குவதால் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாத சூழல் ஏற்படுவதாகவும் அதை போல் தேங்கி கிடக்கும் மழை நீரால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்..எனவே தமிழக அரசு தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த உடனடியாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வேண்டுமென்று  கேட்டுக் கொண்டனர்