விவசாய வேலைக்கு சென்ற பெண்கள் 3 பேர் பரிதாப பலி

டிராக்டர் மீது லாரி மோதி விபத்து 3 பெண்கள் பலி!!!!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில்  டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளனாதில் டிராக்டரில் பயணித்த 3 பேர் பரிதபமாக உயிரிழந்தனர்.


மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எட்டையபுரம் அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் விவசாய வேலைக்கு சென்று விட்டு டிராக்டரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.டிராக்டரை பெரியசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார். டிராக்டர் எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில்  மின்சார வாரியம் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்த போது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்கி விட்டு தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது, அதன் பாகங்கள் சிதறின. மேலும் டிராக்டரில் வந்த அந்தோணியம்மாள், கீதாராணி ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டையபுரம் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் மரகதம்மாள் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லமால்  உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 8 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் வெள்ளத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்