திருப்பூர் ஸ்தம்பித்தது: கலெக்டர் அலுவலகம் நோக்கி சாரை சாரையாக படையெடுத்த இஸ்லாமிய பெண்கள் - சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

திருப்பூர் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்கு 25000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாரை சாரையாக வந்து பங்கேற்று வருகின்றனர்.


திருப்பூர் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.



அதற்காக இன்று காலை 10 மணி முதல் இஸ்லாமியர்கள் சாரைசாரையாக திருப்பூர் பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் நோக்கி படையெடுத்து வந்தனர். அவர்கள் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியிலிருந்து பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.



ஏராளமான இஸ்லாமிய பெண்கள் தேசியக் கொடியை ஏந்தி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதெல்லாம் முற்றிலும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.



இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 25000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியைத் தொடர்ந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கோஷமிட்டனர். திருப்பூர் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  


Previous Post Next Post