கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க சிறப்பு யாகம்!!

குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க சிறப்பு யாகம் நடைபெற்றது.
  



கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகத்தம்மன் கோயிலில் விவசாயம் தழைத்தோங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் சுயம்பு ஆதிநாகத்தம்மன்சக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் விவசாயம் தழைத்தோங்கவும் சிறப்பு யாகம் இரவு நடைபெற்றது. யாகக்குண்டத்தில் அனைத்து விதமான மரப்பட்டைகள் மற்றும் குச்சிகள், பல்வேறு வகையான மூலிகைப் பொருட்கள், திரவியப்பொடிகள், மரத்தால் செய்யப்பட்ட கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, உரல் மற்றும் உலக்கை, கட்டில், அரிவாள், முறம், மூங்கில் கூடை, மூங்கில்தட்டு, விசிறி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் இடப்பட்டன. முன்னதாக குதிரை, பசு, காளை, ஆடு, பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கும் அனைத்து தாவரங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


தொடர்ந்து பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் விழாவில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து படையலிட்டும் மகிழ்ந்தனர். விழாவில் ஜெய்குருதேவ் தெய்வேந்த அடிகளார், ஊராட்சி மன்றத் தலைவர் வசந்திராராஜேந்திரன், புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தமிழரசி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post