பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கசுவாமி,கோயிலில் திருத்தேருக்கான சொருகு கால்கள் சட்டம், புட்டு கால்கள் சட்டம் ஆகியவை திடீரென தீப்பிடித்தது

பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கசுவாமி, சிவகாமி அம்மாள் திருக்கோவில் திருவிழா   10 நாட்கள் நடைபெற உள்ளது. அதற்கான துவக்க விழா   கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதன் தொடர்ச்சியாக 07.02.2020 அன்று திருத்தேர்வடம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  அதற்கான சொருகு கால்கள் சட்டம், புட்டு கால்கள் சட்டம் ஆகியவை தேர்பீடம் அருகே, தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த, திருத்தேருக்கான சொருகு கால்கள் சட்டம், புட்டு கால்கள் சட்டம் ஆகியவை திடீரென தீப்பிடித்து எரிந்தது. 
இத்தகவலை அறிந்த  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் உடனடியாக கன்னியாகுமரி  மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம்  தகவல் தெரிவித்து, நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்.


அதனடிப்படையில்,   மாவட்ட அறங்காவலர்குழு தலைவர்  சிவ குற்றாலம் ,மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர்  எஸ்.கிருஷ்ணகுமார், இணை ஆணையர்  (இந்து சமய அறநிலைத்துறை) எம்.அன்புமணி, அறங்காவலர்  குழு உறுப்பினர் பாக்கியலெட்சுமி  நேரில் சென்று, பார்வையிட்டு, திருத்தேருக்கான சொருகு கால்கள் சட்டம், புட்டு கால்கள் சட்டம் ஆகியவற்றை புதிதாக செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தினார்கள். அதனடிப்படையில், பணிகள் முடுக்கி விடப்பட்டு, தேக்கு மரத்தினாலான  சொருகு கால்கள் சட்டம், புட்டு கால்கள் சட்டம் ஆகியவை செய்யப்பட்டு, திட்டமிட்டபடி எதிர்வரும் 07.02.2020 அன்று திருத்தேரோட்டம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


நடைபெற்ற ஆய்வின்போது, திருக்கோவில் திருப்பணி மன்ற தலைவர்  ராஜேந்திரன், பொதுச்செயலர் ஆர்.பாண்டியன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர்  வசந்த், ரமேஷ்,  எக்ஸ் கவுன்சிலர்  ஜீவா கணேசன், கார்த்திகேயன் ஆகியோர்  உடனிருந்தனர். உதவி கோட்ட பொறியாளர்  (இந்து சமய அறநிலையத்துறை) மோகனதாஸ், கண்காணிப்பாளர்  சிவராமசந்திரன், திருக்கோவில் மேலாளர்  சேதுராமன் ஆகியோர்   தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் ஆலோசனையின்பேரில், பணிகளை வேகமாக மேற்கொண்டு வருவதாக தேரிவித்தார்கள்.