மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.54 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள்!!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி திருமண மண்டபத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 1099 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.42.98 இலட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகளை  மாவட்ட வருவாய் அலுவலர்  ஆர்.சுகுமார் முன்னிலையில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்  வழங்கி தெரிவிக்கையில்,



 இன்றைய விழாவில், உடுமலைப்பேட்டை சட்டமன்றத்திற்குட்பட்ட உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 165 மாணவர்கள், உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 242 மாணவியர்கள், உடுமலைப்பேட்டை ஸ்ரீ விசாலாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 386 மாணவியர்கள்,  உடுமலைப்பேட்டை ராஜேந்திர சாலை  அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 21 மாணவர்கள், 08 மாணவியர்கள் மற்றும் ஸ்ரீகன்னிகா பரமேஷ்வரி மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 119 மாணவர்கள், 188 மாணவியர்கள் என 5 பள்ளிகளைச் சோ;ந்த 305 (தலா ரூ.4043)  மாணவர்கள் மற்றும் 794 (தலா ரூ.3861) மாணவியர்கள் என 1099 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.42,98,749. மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  வழங்கினார்.



 இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ஆர்.ரமேஷ் உடுமலைப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, திருப்பூர்  மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாண்டியன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார்,  உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் தயானந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள்,  கூட்டுறவு சங்கத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான  பொதுமக்கள்  கலந்து  கொண்டனர்.



 


Previous Post Next Post