விமானங்கள் ரத்து; உணவு தட்டுப்பாடு, மருந்தில்லாமல் அவதி - சீனாவில் சிக்கி தவித்த தமிழக மாணவி சொல்கிறார்

 சீனாவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள கோவை மாவட்டம், அன்னூர் மருத்துவ மாணவி கூறியது

 

கோவைமாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்த அனுஸ்ரீ  மற்றும் அபிநயா ஸ்ரீ சகோதரிகள் சீனாவில் உள்ள சியான் மகானத்தில் மருத்துவம் பயின்று வந்தனர். இவருடன் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீயான் தாங் மருத்துவ பல்கலை கழகத்தில் படித்து வந்ததாக கூறினார். மேலும் அவர்கள் கூறுகையில்,   தற்போது அங்கு  வேகமாக கொரானோ வைரஸ் பரவிவருவதால் அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் அங்கிருந்து இந்தியா வர மிகவும் சிரமபட்டு வந்ததாக கூறினார். இதுவரை இல்லாத வகையில் விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யபட்டதால் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியதாகவும் தனது தந்தையின் முயற்சியால் தற்போது இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார் மாணவி அனுஸ்ரீ

மேலும் அங்கு தங்கியிருந்த போது கொரானோ வைரஸ் காரணமாக  தெருக்களே வெறிச்சோடியது என்றார். இத்துடன் கடைகள் அனைத்தும் அடைக்கபட்டு உணவு தட்டுப்பாடு என்பது கடுமையான இருந்ததாகவும், கொரானோ வைரஸ் தடுக்க என்95 மற்றும் சர்ஜிக்கல் மாஸ்k ஆகியவை கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறினார்

பெரும்பாலான மருந்து கடைகளில் தற்போது ஸ்டாக் இல்லாமல் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்தார்

இந்த நிலையில் மத்திய அரசு சீனாவில் உள்ள இந்தியர் களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.